Enable Javscript for better performance
தலித் கிறிஸ்தவர் உரிமை இயக்க செயற்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    


    தலித் கிறிஸ்தவர் உரிமை இயக்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் செங்கல்பட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
    கூட்டத்திற்கு தலைமை வகித்து இயக்கத்தின் நிறுவனர் எல்.யேசுமரியான் பேசினார். மாநிலத் தலைவர் எம்.எஸ்.ராஜன், பொதுச் செயலர் தன்ராஜ், மாநில, மாவட்ட, நகர ஒன்றிய  நிர்வாகிகள், தமிழக கத்தோலிக்க மறை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
    தீர்மானங்கள்: தமிழக அரசு  காஞ்சிபுரம், திருநெல்வேலி மாவட்டங்களைப் பிரிப்பது போல் திருச்சபை நிர்வாகம் கடலூர்-பாண்டிச்சேரி உயர் மறை மாவட்டத்தைப் பிரித்து புதிய விழுப்புரம் கிறிஸ்தவ மறை மாவட்டத்தை உருவாக்க வேண்டும்; தலித் கிறிஸ்தவர்களுக்கு 65 சதவீத இடஒதுக்கீட்டை எல்லா நிறுவனங்களிலும் திருச்சபை நிர்வாகம் உடனே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai