Enable Javscript for better performance
பள்ளி மாணவர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    


    வரதராஜபுரம் பகுதியில் பள்ளி மாணவர் ஒருவர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் ராகுல் (14). 9-ஆம் வகுப்பு மாணவர். கடந்த சில தினங்களாக பள்ளிக்குச் செல்லவில்லை என தெரிகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராகுல் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து சோமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai