முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
ராதா கல்யாண மகோற்ஸவம்
By DIN | Published On : 30th July 2019 04:31 AM | Last Updated : 30th July 2019 04:31 AM | அ+அ அ- |

செங்கல்பட்டு ஸ்ரீராதே கிருஷ்ணா பஜனை மண்டலி குழுவினர் சார்பில் ராதா கல்யாண மகோற்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி செங்கல்பட்டு சத்யசாயி சேவா சமிதி பஜனை, காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான பாகவதர் வி.எஸ். சுப்பிரமணியன் குழுவினரால் குரு கீர்த்தனைகள், அபங்க திவ்ய நாமம், ஸ்ரீராதா கல்யாண மகோற்ஸவம் மற்றும் ஆஞ்சநேயர் உற்சவமும் நடைபெற்றது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பஜனை பாடி நடனமாடி மகிழ்ந்தனர். விழாவையொட்டி சமபந்தி விருந்து நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை டி.வி.சந்துரு, பி.எஸ்.கோவிந்தராஜன், ஆர்.ரமேஷ் மற்றும் பஜனை மண்டலி குழுவினர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.