ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. அஞ்சலி
By DIN | Published On : 01st June 2019 04:16 AM | Last Updated : 01st June 2019 04:16 AM | அ+அ அ- |

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் ஏ.செல்லக்குமார் வெள்ளிக்கிழமை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏ.செல்லகுமார், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவிடத்துக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்தார்.
அவருடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். முன்னதாக, அவரை ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ், மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் அய்யப்பன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.