சுடச்சுட

  
  selvam


  செங்கல்பட்டு கோட்டாட்சியராக செல்வம் வியாழக்கிழமை பொறுப்பேற்றார். 
  செங்கல்பட்டு கோட்டாட்சியராகப் பணியாற்றி வந்த முத்துவடிவேல் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, சில தினங்களுக்கு மட்டும் அதிகாரி ராஜ் என்பவர் கூடுதல் பணியாக கோட்டாட்சியர் பொறுப்பில் இருந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை முதல் செல்வம் செங்கல்பட்டு கோட்டாட்சியராக பொறுப்பேற்றார்.  இவர், இதற்கு முன்னதாக மணப்பாறை வருவாய்த் துறையில் நில எடுப்பு தனித்துறை ஆட்சியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு வருவாய்த் துறை அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai