குழந்தைகள் பாதுகாப்பு சேவைத் திட்டம் : தொண்டு நிறுவனங்களிலிருந்து கருத்துரு வரவேற்பு

குழந்தைகள் பாதுகாப்பு சேவைத் திட்டத்துக்கென தொண்டு நிறுவனங்களிலிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.


குழந்தைகள் பாதுகாப்பு சேவைத் திட்டத்துக்கென தொண்டு நிறுவனங்களிலிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழக அரசு சமூக பாதுகாப்புத் துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு சேவைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 
குழந்தைகளுக்கான பராமரிப்பு இல்லங்களில் தங்க வைக்க இயலாத பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பாதுகாத்தல், குழந்தைகளுக்கான விளையாட்டு, பொழுது போக்கு பூங்கா வசதி ஏற்படுத்துதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
இதற்கென, தகுதி வாய்ந்த பதிவு பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்படிவம் மற்றும் விளக்கக்குறிப்புகளை ஜ்ஜ்ஜ்.ந்ஹய்ஸ்ரீட்ங்ங்ல்ன்ழ்ஹம்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், எண்: 317, கே.டி.எஸ். மணி தெரு, மாமல்லன் நகர், காஞ்சிபுரம்-631502 என்ற முகவரிக்கு இச்செய்தி நாளிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாள்களுக்குள் அனுப்பி வைக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com