அரசு மருத்துவமனைகளில் நீரிழிவு நோய்க்கான மாத்திரைகள் கிடைக்காததால் நோயாளிகள் அவதி

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீரிழிவு நோய்க்கான  மாத்திரைகள் கடந்த இரண்டு மாதங்களாக இருப்பு இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
அரசு மருத்துவமனைகளில் நீரிழிவு நோய்க்கான மாத்திரைகள் கிடைக்காததால் நோயாளிகள் அவதி

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீரிழிவு நோய்க்கான  மாத்திரைகள் கடந்த இரண்டு மாதங்களாக இருப்பு இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏராளமானோர் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் மாதம்தோறும் அரசு  மருத்துவமனைகளுக்கு  சென்று ஒரு மாதத்திற்கு தேவையான மாத்திரைகளை இலவசமாக பெற்று வந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசு மருந்துக் கிடங்கில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு நீரிழிவு நோய்க்கான மாத்திரைகள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 
இதனால் மாவட்ட மருந்துக் கிடங்கில் சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் இருப்பு இல்லை எனக் கூறி, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நீரிழிவு நோய்க்கான மாத்திரைகள் கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்படவில்லை. அரசு மருத்துவமனைகளில் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் அதற்கான மாத்திரைகள் கிடைக்காமல்  மிகுந்த சிரமத்திற்குள்ளாகி  வருகின்றனர்.
ஏழை, எளியோர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதால், நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளை பணம் கொடுத்து தனியார் மருந்தகங்களில் வாங்க முடியாமல் அவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே அரசு மருத்துவமனைகளில் நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த நோயாளிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் கூறியது: 
சென்னையில் உள்ள அரசு மருந்துக் கிடங்கில் நீரிழிவு நோய்க்கான மாத்திரைகள் இருப்பு இல்லை என கூறி மாவட்ட மருந்துக் கிடங்கிற்கு இந்த மாத்திரைகள் கடந்த இரண்டு மாதங்களாக அனுப்பப்படவில்லை. இதனால் மாவட்ட மருந்துக் கிடங்கில் இருந்து அரசு மருத்துவமனைகளுக்கு நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளை வழங்குவது கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. 
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மாத்திரைகள் வழங்க  முடியவில்லை. மெட்பார்மின் எனப்படும் நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளை நோயாளிகள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளாவிட்டால் அவர்களின் உடலில் இன்சுலின் சுரப்பது குறைந்து விடும். இதனால் நோயாளிகளின் நிலை மோசமாகி விடும். அவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தனியார் பங்களிப்புடன் நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளை வழங்கி வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com