ரூ.8.30 லட்சம் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர் முகாமில் 75 பயனாளிகளுக்கு ரூ.8.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ரூ.8.30 லட்சம் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்


காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர் முகாமில் 75 பயனாளிகளுக்கு ரூ.8.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமுக்கு ஆட்சியர் பா.பொன்னையா தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். அப்போது, பொது மக்களிடமிருந்து முதியோர் ஓய்வூதியத் தொகை, கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 450 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் அனைத்தையும் ஆட்சியர் பெற்றுக் கொண்டு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 60 பயனாளிகளுக்கு ரூ.2,14,320 மதிப்பிலான  விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. 15 பயனாளிகளுக்கு ரூ.65,234  மதிப்பிலான விலையில்லா சலவைப் பெட்டிகள், சமூகப் பாதுகாப்புத் திட்டம் சார்பில் 4 பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. 
திருக்கழுகுன்றம் வட்டம், வாயலூர் கிராமத்தில் வசந்தி என்பவர் பாம்பு கடித்து இறந்துவிட்டார். அவரது தந்தை முருகனிடம் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. உத்தரமேரூரை அடுத்த வயலாக்காவூர் கிராமத்தைச் சேர்ந்த பார்வதி என்பவர் மின்னல் தாக்கி அண்மையில் உயிரிழந்தார். அவரது கணவர் பூபாலனிடம் மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ரூ.4 லட்சத்துக்கான காசோலை என மொத்தம் 75 பயனாளிகளுக்கு ரூ.8,29,554 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். 
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், காவாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றிய வேம்புலி என்பவர் பணியின்போது அண்மையில் காலமானார். அவருடைய மகள் தேவிகாவுக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளராக பணிநியமன ஆணைவழங்கப்பட்டது. வருவாய்த் துறையில் கருணை அடிப்படையில் பிந்துஜா என்பவருக்கு கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான ஆணையும், வெங்கடேசன் என்பவருக்கு அலுவலக உதவியாளராக பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டன. 
அதைத் தொடர்ந்து, முன்னாள் படைவீரர்களின் கொடி நாள் வசூல் நிதியாக ஸ்ரீபெரும்புதூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.3 லட்சம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ரூ.3 லட்சத்து 30 ஆயிரம், காஞ்சிபுரம் நகராட்சி சார்பில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 750, குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக சார்பில் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்துக்கான காசோலைகளை அந்தந்த துறை சார்ந்த  அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.  
இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மா.நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சீனிவாசன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர்  சுமதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர் நல அலுவலர் வெ.ஜவஹர், மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் தனலட்சுமி, வட்டாட்சியர்கள், அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com