வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு

மதுராந்தகம் வருவாய் உட்கோட்டப்பகுதிக்கு உட்பட்ட மக்களின் குறைகளுக்குத் தீர்வு காண நடைபெற்று வந்த ஜமாபந்தி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.


மதுராந்தகம் வருவாய் உட்கோட்டப்பகுதிக்கு உட்பட்ட மக்களின் குறைகளுக்குத் தீர்வு காண நடைபெற்று வந்த ஜமாபந்தி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.
இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 29-ஆம் தேதி மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கியது. வருவாய் தீர்ப்பாய அலுவலர் தங்கவேல் தலைமை வகித்தார். வட்டாட்சியர் ஜெயசித்ரா, துணை வட்டாட்சியர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஜமாபந்தி நிகழ்ச்சியில் மதுராந்தகம் வருவாய்த் துறைக்கு உட்பட்ட 120-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக மனுக்களை அளித்தனர். 
கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் இந்த மாதம் 18-ஆம் தேதி வரை 2,518 மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றில் 315 மனுக்கள் ஏற்கப்பட்டன. 108 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மற்ற 2,095 மனுக்கள் பல்வேறு துறைகளுக்கு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டன. 
நிறைவு நாளான 18-ஆம் தேதி, 273 பயனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ரூ.8 லட்சத்து 81 ஆயிரத்து 200 மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுராந்தகம் வருவாய்த் துறையினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com