ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் திறப்பு

அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் புதிய கட்டடத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தார். 
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் திறப்பு


அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் புதிய கட்டடத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தார். 
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு போதுமான இட வசதி இல்லாததால், பொதுமக்களும், அலுவலக ஊழியர்களும் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். 
இதனால் புதிய அலுவலகக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து, ரூ. 2.43 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டத் திட்டமிடப்பட்டு, கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டடத்தை, சென்ûனை தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொலிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, குத்துவிளக்கேற்றி வைத்து, அலுவலகப் பணிகளைத் தொடங்கி வைத்தார். 
இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சார்லஸ், வெங்கடேசன், மாவட்ட அதிமுக செயலர் எஸ்.ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. கணிதா சம்பத், மாவட்ட பேரவைச் செயலர் ஆனூர் பக்தவத்சலம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் பிரமீளா விவேகானந்தன், அதிமுக ஒன்றியச் செயலர்கள் கோ.அப்பாதுரை
(மதுராந்தகம்), சுப்பிரமணி (அச்சிறுப்பாக்கம்), மறைமலைநகர் நகர மன்ற முன்னாள் தலைவர் கோபிகண்ணன், மாவட்ட மருத்துவரணி இணைச் செயலர் பிரவீண்குமார்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
புதிய அலுவலகக் கட்டடத் திறப்பு விழாவையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com