சுடச்சுட

  


  அஞ்சல் சேவைகள் சார்ந்த குறை தீர்க்கும் கூட்டம், செங்கல்பட்டு அஞ்சல் கோட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜூன் 27) மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது. 
  பொதுமக்கள் தங்களுக்கு பதிவு அஞ்சல், பார்சல், காப்பீட்டு அஞ்சல் ஆகியவற்றை அனுப்புவதிலும், பெறுவதிலும் சிரமங்கள், குறைகள் ஏதும் இருந்தால் அஞ்சலக கண்காணிப்பாளருக்கு மனு அனுப்பலாம். சம்பந்தப்பட்ட அஞ்சல் பதிவு செய்யப்பட்ட தேதி, பதிவு செய்யப்பட்ட அஞ்சல் அலுவலகத்தின் பெயர், அனுப்புநர், பெறுநர் முகவரி ஆகிய தகவல்களுடன் புகார் மனுக்களை அஞ்சலகக் கண்காணிப்பாளர், செங்கல்பட்டு கோட்டம், செங்கல்பட்டு - 603 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தவிர, சேமிப்புக் கணக்குகள் மற்றும் சேமிப்புப் பத்திரங்கள் சம்பந்தப்பட்ட குறைகளையும் அனுப்பலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இரா.அமுதா தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai