சுடச்சுட

  


  திருப்போரூர், திருக்கழுகுன்றம் ஆகிய வட்டங்களில் புதிய வட்டாட்சியர்கள் பொறுப்பேற்றனர். 
  திருப்போரூர் வட்டாட்சியராகப் பணியற்றி வந்த க.ராஜ்குமார் காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின்  நேர்முக உதவியாக மாற்றப்பட்டார். 
  காஞ்சிபுரம் தனி வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த ராஜேந்திரன் திருப்போரூர் வட்டாட்சியராக மாற்றப்பட்டார். இதையடுத்து, திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார். 
  திருக்கழுகுன்றம் வட்டாட்சியராகப் பணியாற்றிவந்த வரதராஜன் காஞ்சிபுரம் தனி வட்டாட்சியாக மாற்றப்பட்டார். காஞ்சிபுரம் வட்டாட்சியராக பணியாற்றி வந்த அ.தங்கராஜ், திருக்கழுகுன்றம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். அவர் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai