சுடச்சுட

  

  ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் ரத்து

  By DIN  |   Published on : 26th June 2019 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குச் சொந்தமான கடைகள் செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட இருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக இந்த ஏலம் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
  நகர பேருந்து நிலையத்தில், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக பேருந்து நிலைய மேம்பாட்டு நிதியில் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் 26 கடைகள் கட்டப்பட்டன. இந்தக் கடைகள் கடந்த 2010-ஆம் ஆண்டில் ஏலம் விடப்பட்டன. இதையடுத்து மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தக் கடைகளுக்கான உரிமம் புதுப்பிக்கப்பட்டு வந்தது. 
  பேரூராட்சிக்குச் சொந்தமான கடைகள் ஏலம் விடப்பட்டு 9 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள 26 கடைகளையும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பு ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக வெளியிடப்பட்டது. 
  இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த கடைகளுக்கான ஏலம் நிர்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai