சுடச்சுட

  


  மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்குத் தீர்வு காணும் நலன் காக்கும் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) நடைபெறவுள்ளது. 
  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களையும் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் நலன் காக்கும் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களுக்குத் தீர்வு பெற்று வருகின்றனர். அதன்படி, வரும் 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலக வளாகதத்தில் உள்ள பொதுமக்கள் நல்லுறவு மையத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் கலந்துகொண்டு வேளாண் மற்றும் அதைச் சார்ந்த துறை தொடர்பான கோரிக்கை மனுக்களுக்குத் தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai