பழங்குடியினருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 02nd March 2019 03:10 AM | Last Updated : 02nd March 2019 03:10 AM | அ+அ அ- |

வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, உத்தரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மலைவாழ்மக்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இருளர் சமூகத்தினருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி மலைவாழ் மக்கள் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் முருகேசன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள், நேரு, சரவணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், மலையாங்குளம், நாஞ்சிபுரம், காரியமங்கலம், காக்கநல்லுôர், அரசாணிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இருளர் சமூகத்தினர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், இருளர் மக்கள் வாழ்ந்து வரும் இடங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குதல், ஆட்சேபனைக்குரிய அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வசித்து வருவோருக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்குதல், தரமான தொகுப்பு வீடுகள் கட்டித்தருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, வட்டாட்சியர் சாந்தியிடம் மனுக்களை அளித்தனர். இதில், மலைவாழ் மக்கள், இருளர் சமூகத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர்.