மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா

மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. 


மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. 
விழாவில், மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்தின் சார்பாக, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை மாவட்டச் செயலரும், உத்திரமேரூர் எம்எல்ஏவுமான சுந்தர் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ புகழேந்தி, வடக்கு ஒன்றியச் செயலர் சத்யசாய், நகரச் செயலர் கே.குமார், திமுக நிர்வாகிகள் ஆறுமுகம், தேவராஜ், செல்வம் உள்பட கலந்துகொண்டனர். மாமண்டூர், கருணாகரச்சேரி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com