சுடச்சுட

  

  திருமால்பூரிலிருந்து அரக்கோணம் வரை மின்சார ரயில் சேவை நீட்டிப்பு: பயணிகள் வரவேற்பு

  By DIN  |   Published on : 16th March 2019 11:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  சென்னை கடற்கரையிலிருந்து திருமால்பூர் வரை இயக்கப்பட்ட ரயில் சேவையை அரக்கோணம் வரை நீட்டித்து ரயில்வே நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது. இதை, காஞ்சிபுரம் பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர். 
  சென்னை கடற்கரையில் இருந்து, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக, திருமால்பூர் வரையில், மின்சார ரயில்கள் தினமும் 5 முறை இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-காஞ்சிபுரம்-அரக்கோணம்-சென்னை கடற்கரை எனும் சுற்று வட்ட ரயில் பாதைத் திட்டப்பணிகள் அண்மையில் முடிவடைந்தன. 
  இதைத் தொடர்ந்து, வழக்கமாக இயக்கப்படும் மின்சார ரயில்கள் தற்போது திருமால்பூரிலிருந்து அரக்கோணம் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு காஞ்சிபுரம் பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
  இதுகுறித்து ரயில் பயணிகள் சனிக்கிழமை கூறியது:  
  சுற்று வட்ட ரயில் பாதைத் திட்டம் முடிவடைந்ததும் புதிய ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்த்தோம். புதிய சேவை ஏதும் இல்லை. மாற்றாக,  சென்னை கடற்கரையில் இருந்து, திருமால்பூர் வரை இயக்கப்படும் சில ரயில்கள் அரக்கோணம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. இதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். ஆனாலும், புதிய ரயில்கள் எதுவும் இயக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது என அவர்கள் தெரிவித்தனர். 
  ரயில்கள் புறப்படும் நேரம்: அதி
  காலை 5:10 மணிக்கு, திருமால்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில், இனி, அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து, அதிகாலை 4:40 மணிக்கு புறப்பட்டு, செங்கல்பட்டு வழியாக, சென்னை கடற்கரைக்கு, காலை 8:30 -க்குச் சென்றடையும். காலை 7.50 மணிக்கு, திருமால்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில், முன்னதாக, அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து காலை, 7:15 மணிக்கு புறப்பட்டு, காலை 10.30 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும். மாலை 5.10 மணிக்கு, திருமால்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில், இனி, அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும்.  
  சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - அரக்கோணம் மார்க்கம்: வழக்கமாக நண்பகல் 1.35 மணிக்கு, சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில், மாலை 4.15 மணிக்கு திருமால்பூர் வந்தடையும். இனி அந்த ரயில் நண்பகல் 12.45 மணிக்கே புறப்பட்டு, மாலை 4.15 மணிக்கு அரக்கோணம் சென்றடையவுள்ளது. மேலும், மாலை 6.13 மணிக்கு, சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில், இரவு 8.45 மணிக்கு, திருமால்பூர் வந்தடையும். இந்த அந்த ரயில் அரக்கோணம் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுபோல், இரவு 7.09 மணிக்கு, சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில், இரவு, 10.30 மணிக்கு திருமால்பூருக்கு வந்தடையும். இந்த ரயில் தற்போது அரக்கோணம் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிற்பகல்  3.25 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் மின்சார ரயில், மாலை 6 மணிக்கு காஞ்சிபுரம் வரை செல்லும். தற்போது, இந்த ரயில் சேவை  திருமால்பூர் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, திருமால்பூரிலிருந்து இரவு  7.20 மணிக்கு புறப்பட்டு,  செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்கு இரவு 10.30 மணிக்கு சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai