சுடச்சுட

  

  சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சந்தவேலூர் சமுதாய நலக் கூடத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் சந்தவேலூர் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த 1999-ஆம் ஆண்டில் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சமுதாய நலக் கூடம் கட்டப்பட்டது. இதையடுத்து சந்தவேலூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை சமுதாய நலக் கூடத்தில் நடத்தி வந்தனர். இந்நிலையில், சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் பழைமையான கட்டடத்தில் இயங்கி வந்த சுங்குவார்சத்திரம் காவல் நிலையம், சந்தவேலூர் சமுதாய நலக் கூடத்துக்கு மாற்றப்பட்டு காவல் நிலையமாக செயல்பட்டு வந்தது.
   கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, திருமங்கலம் பகுதியில் காவல் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டதையடுத்து காவல் நிலையம் அங்கு இட மாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்னர், சமுதாய நலக்கூடம் பயன்பாட்டுக்கு வரும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சமுதாய நலக்கூடம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதைச் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என சந்தவேலூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: பல ஆயிரம் செலவு செய்து தனியார் மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சமுதாய நலக்கூடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai