அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மற்றும் திருப்போரூர் சட்டப் பேரவை அதிமுக வேட்பாளர் ஆகியோருக்கான அறிமுகக் கூட்டம்


காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மற்றும் திருப்போரூர் சட்டப் பேரவை அதிமுக வேட்பாளர் ஆகியோருக்கான அறிமுகக் கூட்டம் செங்கல்பட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்டப்பேரவை வேட்பாளர் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். செங்கல்பட்டு நகரச் செயலர் செந்தில்குமார் வரவேற்றார்.  அதிமுக அமைப்புச் செயலர் வி.சோமசுந்தரம், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம், பாமக நிர்வாகிகள் கணேசமூர்த்தி காரணை ராதாகிருஷ்ணன், பாஜகவைச் சேர்ந்த யோகேந்திரநாயுடு, பாப்பையா ரவி, ராஜேந்திரன், மகேஷ்  உள்ளிட்டோர் வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசினர்.
இதில், முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், அதிமுக நிர்வாகிகள் செ.து.வ.சண்முக சுந்தரம், வழக்குரைஞர் விநாயகம், நெல்லை ராதா, டூயட் ஏழுமலை, ஆமூர் ஏழுமலை, அரிகிருஷ்ணன், பவுலின் ஜான், வாணி நடராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பவுஞ்சூரில்...
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கான அறிமுகக் கூட்டம் பவுஞ்சூரில் உள்ள தனியார் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அதிமுக கூட்டணிக் கட்சிகளின் சார்பாக நடைபெற்ற இக்கூட்டத்துக்கு செய்யூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராஜு தலைமை வகித்தார். 
முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்டச் செயலர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தேமுதிக மாவட்டச் செயலர் வழக்குரைஞர் ராஜேந்திரன், பாமக மாநில துணைப் பொதுச் செயலர் பொன்.கங்காதரன், மாவட்டச் செயலர் கோபாலகண்ணன், அதிமுக நிர்வாகிகள் ரஞ்சன், நித்தியானந்தம், மாவட்ட அம்மா பேரவைச் செயலர் பக்தவத்சலம், பாஜக மாவட்டத் தலைவர் சிவசெந்தமிழரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com