ஸ்ரீபெரும்புதூரில் விஷவாயு தாக்கி 6 பேர் சாவு

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கழிவுநீர்த் தொட்டிக்குள் விழுந்தவர், அவரைக் காப்பாற்ற அடுத்தடுத்து தொட்டிக்குள் இறங்கிய தந்தை, 2 மகன்கள் உள்பட 6 பேரும் விஷவாயு  தாக்கி இறந்தனர்.  

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குள்பட்ட விநாயகா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (52). அவர் தனது வீட்டின் முதல் மாடியில் அறைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.
அவரது வீட்டின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்வதற்காக கழிவுநீர் வண்டியை செவ்வாய்க்கிழமை வரவழைத்தார். கழிவுநீர்த் தொட்டியில் இருந்து ஒரு லாரி கழிவுநீர் அகற்றப்பட்ட  பிறகும் தொட்டிக்குள் கழிவுநீர் இருந்தது. இதையடுத்து அந்த லாரி ஓட்டுநர், தொட்டியில் அதிகமாக கழிவுநீர் உள்ளதால், லாரியில் உள்ள கழிவுநீரைக் கொட்டிவிட்டு மீண்டும் வருவதாக கூறிவிட்டுச் சென்றார். 
இதனால் தொட்டியில் மீதி எவ்வளவு கழிவுநீர் இருக்கும் என்பதைப் பார்க்க கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ள ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த சுரதா சிபியை(28) அழைத்து, தொட்டிக்குள் இறங்கிப் பார்க்குமாறு கூறினார். இதையடுத்து, சுரதா சிபி தொட்டிக்குள் இறங்கியதும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். 
அவரைக் காப்பாற்ற கிருஷ்ணமூர்த்தி தொட்டிக்குள் இறங்கினார். அவரும் மயங்கி விழவே கிருஷ்ணமூர்த்தியின் மகன்கள் கார்த்திக்(23), கண்ணன்(25) ஆகியோர் தொட்டிக்குள் இறங்கி, மற்றவர்களைக் காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களும் விஷவாயு தாக்கி தொட்டிக்குள் விழுந்தனர். கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த பரமசிவம்(31), தொட்டிக்குள் இறங்கியபோது மயக்கம் அடைந்தார். 
அவ்வழியாக வந்த திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த லட்சுமிகாந்த்(22) என்பவர், தொட்டிக்குள் இறங்கியபோது அவரும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். இது தொடர்பாக அங்கிருந்தவர்கள் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலையத்திற்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர்,  ஸ்ரீபெரும்புதூர் உதவி  காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் மற்றும் போலீஸாரின் உதவியுடன் கழிவுநீர்த் தொட்டிக்குள் விழுந்த 6 பேரையும் தொட்டியில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். இதில் 6 பேரும் விஷவாயு தாக்கி இறந்தது தெரிய வந்தது.
சம்பவ இடத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, சார்-ஆட்சியர் சரவணன், ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் காஞ்சனமாலா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பழனி  ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு வந்து, இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். 
ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஸ்ரீபெரும்புதூர், மார்ச் 26: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கழிவுநீர்த் தொட்டிக்குள் விழுந்தவர், அவரைக் காப்பாற்ற அடுத்தடுத்து தொட்டிக்குள் இறங்கிய தந்தை, 2 மகன்கள் உள்பட 6 பேரும் விஷவாயு  தாக்கி இறந்தனர்.  
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குள்பட்ட விநாயகா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (52). அவர் தனது வீட்டின் முதல் மாடியில் அறைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.
அவரது வீட்டின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்வதற்காக கழிவுநீர் வண்டியை செவ்வாய்க்கிழமை வரவழைத்தார். கழிவுநீர்த் தொட்டியில் இருந்து ஒரு லாரி கழிவுநீர் அகற்றப்பட்ட  பிறகும் தொட்டிக்குள் கழிவுநீர் இருந்தது. இதையடுத்து அந்த லாரி ஓட்டுநர், தொட்டியில் அதிகமாக கழிவுநீர் உள்ளதால், லாரியில் உள்ள கழிவுநீரைக் கொட்டிவிட்டு மீண்டும் வருவதாக கூறிவிட்டுச் சென்றார். 
இதனால் தொட்டியில் மீதி எவ்வளவு கழிவுநீர் இருக்கும் என்பதைப் பார்க்க கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ள ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த சுரதா சிபியை(28) அழைத்து, தொட்டிக்குள் இறங்கிப் பார்க்குமாறு கூறினார். இதையடுத்து, சுரதா சிபி தொட்டிக்குள் இறங்கியதும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். 
அவரைக் காப்பாற்ற கிருஷ்ணமூர்த்தி தொட்டிக்குள் இறங்கினார். அவரும் மயங்கி விழவே கிருஷ்ணமூர்த்தியின் மகன்கள் கார்த்திக்(23), கண்ணன்(25) ஆகியோர் தொட்டிக்குள் இறங்கி, மற்றவர்களைக் காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களும் விஷவாயு தாக்கி தொட்டிக்குள் விழுந்தனர். கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த பரமசிவம்(31), தொட்டிக்குள் இறங்கியபோது மயக்கம் அடைந்தார். 
அவ்வழியாக வந்த திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த லட்சுமிகாந்த்(22) என்பவர், தொட்டிக்குள் இறங்கியபோது அவரும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். இது தொடர்பாக அங்கிருந்தவர்கள் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலையத்திற்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர்,  ஸ்ரீபெரும்புதூர் உதவி  காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் மற்றும் போலீஸாரின் உதவியுடன் கழிவுநீர்த் தொட்டிக்குள் விழுந்த 6 பேரையும் தொட்டியில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். இதில் 6 பேரும் விஷவாயு தாக்கி இறந்தது தெரிய வந்தது.
சம்பவ இடத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, சார்-ஆட்சியர் சரவணன், ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் காஞ்சனமாலா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பழனி  ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு வந்து, இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். 
ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com