Enable Javscript for better performance
அதிமுக வேட்பு மனுவை நிராகரிக்கக் கோரி ஆட்சியரிடம் சுயேச்சை வேட்பாளர் மனு- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக வேட்பு மனுவை நிராகரிக்கக் கோரி ஆட்சியரிடம் சுயேச்சை வேட்பாளர் மனு

    By DIN  |   Published on : 28th March 2019 04:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலின் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரி சுயேச்சை வேட்பாளர் ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தார்.
    காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக மரகதம் குமரவேல் ஆட்சியர் பா.பொன்னையாவிடம்  கடந்த திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக அவரது கணவர் குமரவேல் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
    அவரது வேட்பு மனுவில் தனது மனைவியின் பெயரில் ரூ.70 லட்சம் சொத்து இருப்பதாக தவறுதலாகப் பதிவு செய்திருந்ததால் வேட்பு மனுவில் குழப்பம் ஏற்பட்டது. 
    இதனால் அவர் செவ்வாய்க்கிழமை மீண்டும் திருத்தப்பட்ட வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து, அதிமுக வேட்பாளர் மரகதம், மாற்று வேட்பாளரான குமரவேலின் வேட்பு மனுக்களை ஆட்சியர் பரிசீலனை செய்தார். அப்போது, மரகதம் வேட்பு மனுவில் விண்ணப்பம் 2 ஏ இல் குறிப்பிடவேண்டிய தமிழ்நாடு, காஞ்சிபுரம் ஆகிய வார்த்தைகளைக் குறிப்பிடவில்லை. இதனால், மரகதம் வேட்பு மனுவில் சிக்கல் ஏற்பட்டது. 
    இதைத் தொடர்ந்து, மரகதம் குமரவேலின் மனுகுறித்து சுயேச்சை வேட்பாளர் கோவிந்தவாடி ரமேஷ் எதிர்ப்பு தெரிவித்து முறையிட்டார். 
    இந்நிலையில், மரகதம் குமரவேலின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்யக்கோரி ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தார். அவரது மனுவை விசாரிப்பதாக ஆட்சியர் கூறினார். இதனால், அதிமுக வட்டாரத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai