Enable Javscript for better performance
ஆதிபராசக்தி கல்லூரியில் கருத்தரங்கம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஆதிபராசக்தி கல்லூரியில் கருத்தரங்கம்

    By DIN  |   Published On : 28th March 2019 04:06 AM  |   Last Updated : 28th March 2019 04:06 AM  |  அ+அ அ-  |  


    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் துறை  சார்பாக 2 நாள் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது. 
    கருத்தரங்கத்துக்கு தாளாளர் கோ.ப.செந்தில்குமார் தலைமை வகித்தார். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் ஜி.பாஸ்கரன், இயக்குநர் சு.ஜெயஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
    இதில், சிறப்பு விருந்தினர்களாக பெங்களூரு தேசிய மின்சக்தி பயிற்சி மைய உதவி இயக்குநர் வி.சுரேஷ்பாபு, வேலூர் விஐடி பல்கலைக்கழகப் பேராசிரியர் கே.ரவி ஆகியோர் கலந்துகொண்டு  கருத்தரங்க மலர், குறுந்தகடு ஆகியவற்றை வெளியிட்டனர். அவற்றைக் கல்லூரி முதல்வர் வா.ராமசாமி பெற்றுக் கொண்டார். 
    பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். சிறந்த மாணவர்களுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பேராசிரியர் எஸ்.ஏ.இளங்குரிசில் நன்றி கூறினார்.
     தொடர்ந்து, வியாழக்கிழமை (மார்ச் 28) 2-ஆவது நாளாக கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர். 


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp