Enable Javscript for better performance
கட்டடக்கலை மரபு புகைப்படக் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    
    cert


    கட்டடக்கலை மரபு புகைப்படக் கண்காட்சி காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி வளாகத்தில் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் சார்பில் தமிழக கட்டடக்கலை மரபு எனும் தலைப்பில் இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டது. இதை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் கண்ணபாபு தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஞானத்தாய் தலைமை வகித்தார். தொல்லியல் துறை உதவி ஆய்வாளர் நீதி அனில் ஒருங்கிணைத்தார். 
    இதில் தமிழகத்தின் தலைசிறந்த பழங்காலக் கோயில்களின் கட்டடக்கலை சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. முன்னதாக, இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனமும், பச்சையப்பன் கல்லூரியும் இணைந்து காஞ்சிபுரத்தின் கலாசாரப் பாரம்பரியம், தமிழக கட்டடக்கலை பாரம்பரியம் ஆகிய தலைப்புகளில் கட்டுரைப் போட்டிகளை நடத்தின. அவற்றில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டப்பட்டது. கண்காட்சியில் திரளானோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai