Enable Javscript for better performance
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் 31 வேட்பு மனுக்கள் ஏற்பு: திருப்போரூர் பேரவைத் தொகுதியில்- Dinamani

சுடச்சுட

    

    காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் 31 வேட்பு மனுக்கள் ஏற்பு: திருப்போரூர் பேரவைத் தொகுதியில் 12 வேட்பு மனுக்கள் ஏற்பு

    By DIN  |   Published on : 28th March 2019 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kanji

    வேட்பாளர்கள் முன்னிலையில் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள்.


    காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிகளில் 31 வேட்பு மனுக்களும், திருப்போரூர் பேரவைத் தொகுதியில் 12 வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. 
    மக்களவைத் தேர்தல் வேட்பு மனு  தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரம் (தனி)மக்களவைத் தொகுதியில் 13 வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதேபோல், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் 21 வேட்பாளர்கள் வருவாய் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதன்படி, செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மொத்தம் 34 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 
    இதைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பு மனுக்கள் பரிசீலனை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் குறை தீர் மையத்தில் புதன்கிழமை காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. 
    இதில், அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், திமுக வேட்பாளர் ஜி.செல்வம் உள்பட 27 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 11 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. மக்கள் நீதி மய்யம், இந்திய குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் உள்பட 16 வேட்பு மனுக்கள் உரிய விவரங்கள் பூர்த்தி செய்யப்படாததால் நிராகரிக்கப்பட்டது. 
    ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் 54 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. வேட்பு மனுக்கள் பரிசீலனை மாவட்ட வருவாய் அலுவலர் என்.சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. 
    இதில், அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் அ.வைத்தியலிங்கம், திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட 20 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 34 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
    திருப்போரூர் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்:  இதில் மொத்தம் 20 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதற்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜு தலைமையில் நடைபெற்றது. 
    இதில், அதிமுக வேட்பாளர் எஸ்.ஆறுமுகம், திமுக வேட்பாளர் எல்.இதயவர்மன், அமமுக எம்.கோதண்டபாணி உள்பட 12 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 
    8 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என தேர்தல் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதைத்தொடர்ந்து, வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வெள்ளிக்கிழமை (மார்ச் 29) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai