Enable Javscript for better performance
மாத்தூர் அரசுப் பள்ளிக்கு கல்விச்சீர்- Dinamani

சுடச்சுட

    
    school


    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மாத்தூர் அரசு தொடக்கப்பள்ளிக்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கல்விச்சீர் புதன்கிழமை வழங்கப்பட்டது.
    ஒரகடத்தை அடுத்த மாத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் பள்ளிக்குத் தேவையான கல்வி, விளையாட்டு உபகரணங்கள், தளவாடப் பொருள்கள் கல்விச்சீராக வழங்கப்பட்டன. 
    விழாவுக்கு, தலைமையாசிரியர் பூங்கோதை தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் மதிவாணன், தொடக்கக் கல்வி அலுவலர் காஞ்சனா, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
    விழாவில், பள்ளிக்கூடத்துக்கு சுற்றுச் சுவர் மற்றும் கழிப்பறைகள் அமைத்துக் கொடுத்த பிரிசிஸியன் நிறுவனங்களின் தலைவர் பாலசுப்பிரமணியம், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் சீதா.சீனிவாசன், எஸ்.பி.எம். நிறுவனத்தின் தலைவர் முருகன், கல்விக் குழு தலைவர் ரவி, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் கிருஷ்ணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ஹேமலதா, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சண்முகம் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  முன்னதாக, மாத்தூர் விநாயகர் கோயிலில் இருந்து பள்ளிக்குத் தேவையான பொருள்களை பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்து  வந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai