Enable Javscript for better performance
ரௌடி வெட்டிக் கொலை- Dinamani

சுடச்சுட

    


    செங்கல்பட்டை அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியில் ரௌடியை வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
    கூடுவாஞ்சேரி-கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் ரௌடி குட்டா (எ) வினோத் (29). இவர் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில்  நந்திவரம் நந்தீஸ்வரர் கோயில் வழியாக தனது பைக்கில் வீட்டுக்குச்  சென்றுகொண்டிருந்தார். அப்போது இரண்டு பைக்குகளில் வந்த 4 பேர் தங்களிடமிருந்த கத்தி போன்ற ஆயுதங்களால் வினோத்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.  இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூடுவாஞ்சேரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். 
    இதைத் தொடர்ந்து, ஓட்டேரி காவல் துணைக் கண்காணிப்பாளர்  வளவன், கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து வினோத்தின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  
      கொலையுண்ட வினோத் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பல காவல் நிலையங்களில் உள்ளதாகவும், முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் 10-க்கும் மேற்பட்டோரை கூடுவாஞ்சேரி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai