ஆதிபராசக்தி கல்லூரியில் கருத்தரங்கம்
By DIN | Published On : 28th March 2019 04:06 AM | Last Updated : 28th March 2019 04:06 AM | அ+அ அ- |

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் துறை சார்பாக 2 நாள் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது.
கருத்தரங்கத்துக்கு தாளாளர் கோ.ப.செந்தில்குமார் தலைமை வகித்தார். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் ஜி.பாஸ்கரன், இயக்குநர் சு.ஜெயஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிறப்பு விருந்தினர்களாக பெங்களூரு தேசிய மின்சக்தி பயிற்சி மைய உதவி இயக்குநர் வி.சுரேஷ்பாபு, வேலூர் விஐடி பல்கலைக்கழகப் பேராசிரியர் கே.ரவி ஆகியோர் கலந்துகொண்டு கருத்தரங்க மலர், குறுந்தகடு ஆகியவற்றை வெளியிட்டனர். அவற்றைக் கல்லூரி முதல்வர் வா.ராமசாமி பெற்றுக் கொண்டார்.
பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். சிறந்த மாணவர்களுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பேராசிரியர் எஸ்.ஏ.இளங்குரிசில் நன்றி கூறினார்.
தொடர்ந்து, வியாழக்கிழமை (மார்ச் 28) 2-ஆவது நாளாக கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...