குழந்தைகள் உரிமை பாதுகாப்புக் குழு நிர்வாகிகளுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி முகாம்
By DIN | Published On : 28th March 2019 04:05 AM | Last Updated : 28th March 2019 04:05 AM | அ+அ அ- |

குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்குழு சார்பில் திறன் வளர்ப்புப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
உத்தரமேரூரை அடுத்த காவனூர்-புதுச்சேரி கிராமத்தில் குழந்தைகள் தோழமைக் கூட்டமைப்பு மற்றும் சர்வோ அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் உரிமை பாதுகாப்புக் குழு நிர்வாகிகளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாமுக்கு, தோழமைக் கூட்டமைப்புத் தலைவர் தேவன்பு தலைமை வகித்தார். அறக்கட்டளை நிர்வாகி கலைச்செல்வி முன்னிலை வகித்தார்.
நிகழ்வில், குழந்தைகள் பாதுகாப்பின் அவசியம், குழந்தைகளை வளர்க்கும் முறைகள், குழந்தைகளின் கட்டாயக் கல்வி, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுதல், பாலியல் தொந்தரவிலிருந்து பெண் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள், அங்கன்வாடிகளில் குழந்தைகளைக் கண்காணித்தல், ஆசிரியர்களின் கற்பித்தல் மற்றும் அணுகுமுறைகள் குறித்துக் கேட்டறிதல், குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் சூழ்நிலையை உருவாக்குதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் குழந்தைகள் உரிமை பாதுகாப்புக் குழு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...