திம்மராஜம்பேட்டையில் குடிநீர் விநியோகம் தொடங்கியது

காஞ்சிபுரம் அருகே குடிநீருக்காக போராட்டம் நடத்திய திம்மராஜம்பேட்டை கிராமத்தினருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணி வியாழக்கிழமை


காஞ்சிபுரம் அருகே குடிநீருக்காக போராட்டம் நடத்திய திம்மராஜம்பேட்டை கிராமத்தினருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது .
காஞ்சிபுரத்தை அடுத்த திம்மராஜம்பேட்டை ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து, ஊராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்யவில்லை என்று கூறி, அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில் மார்ச் 25-இல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து,  வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் திம்மராஜம்பேட்டை ஊராட்சிக்குச் சென்று கடந்த 2 நாள்களாக ஆய்வு மேற்கொண்டார். 
இதைத் தொடர்ந்து, அப்பகுதியினருக்கு வியாழக்கிழமை முதல் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர் கூறியது: 
திம்மராஜம்பேட்டை ஊராட்சியில் அனைத்து குடிநீர்க் குழாய்களிலும் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஊராட்சிச் செயலர் நாகராஜ் மீது உள்ள அதிருப்தி காரணமாக சாலை மறியல் நடத்தியுள்ளனர். 
இதையடுத்து, பொதுமக்களிடம் சுமுகமாக நடந்து கொள்ள ஊராட்சிச் செயலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள ஆழ்துளைக் கிணற்றையும் சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com