அருங்காட்சியகத்தில் கோடைகால பயிற்சி முகாம் 18-இல் தொடக்கம்
By DIN | Published On : 15th May 2019 04:07 AM | Last Updated : 15th May 2019 04:07 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகத்தில், வரும் 18-ஆம் தேதி முதல் கோடை காலப் பயிற்சி முகாம் தொடங்கவுள்ளது.
சர்வதேச அருங்காட்சியக தினத்தையொட்டி, காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு ஹோட்டல் வளாகத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகம் சார்பில் கோடை காலப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. அதன்படி, வரும் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை சாக்பீஸில் சிற்பங்கள் செய்யும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
10 வயதுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலரும் பெயரைப் பதிவு செய்து கொண்டு பயிற்சியில் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 81899 65485, 9942 314705 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் தெரிவித்துள்ளார்.