இளைஞர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
By DIN | Published On : 15th May 2019 04:05 AM | Last Updated : 15th May 2019 04:05 AM | அ+அ அ- |

தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுராந்தகத்தை அடுத்த சின்ன கயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராயனின் மகன் பிரகாஷ் (26). அவர் அச்சிறுப்பாக்கம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக நடந்து கொண்டார்.
அவரது குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் சரவணன் குற்றவாளி பிரகாஷைக் கைது செய்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானியின் பரிந்துரையின்படி, பிரகாஷை குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டார்.
அதன்படி, அச்சிறுப்பாக்கம் போலீஸார், பிரகாஷை சென்னை புழல் சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.