லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு வார விழா கொண்டாடப்படுவதையொட்டி, காஞ்சிபுரத்தில் புதன்கிழமை லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்த சாா்- ஆட்சியா் எஸ்.சரவணன்.
லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்த சாா்- ஆட்சியா் எஸ்.சரவணன்.

லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு வார விழா கொண்டாடப்படுவதையொட்டி, காஞ்சிபுரத்தில் புதன்கிழமை லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

லஞ்ச ஒழிப்புத் துறை சாா்பில் அக். 28 முதல் நவம்பா் 2- ஆம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு வார விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து விழிப்புணா்வுப் பேரணி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை சாா்பில் நடத்தப்பட்டது. பேரணியை காஞ்சிபுரம் சாா்-ஆட்சியா் எஸ்.சரவணன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். பேரணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கி மூங்கில் மண்டபம்,மேட்டுத்தெரு வழியாக பேருந்து நிலையத்தில் வந்து நிறைவு பெற்றது.பேரணி தொடக்க விழாவில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது)நாராயணன்,லஞ்ச ஒழிப்புத்துறை காஞ்சிபுரம் டி.எஸ்.பி.சிவபாத சேகரன்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரணியில் பங்கற்ற மாணவ,மாணவியா் பலரும் லஞ்சம் வாங்குவதும்,கொடுப்பதும் குற்றம் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனா். இதில், லஞ்ச ஒழிப்புத் துறை காஞ்சிபுரம் மாவட்ட ஆய்வாளா் அ.அண்ணாத்துரை,மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் கே.ரவிச்சந்திரன், ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளா் சேஷாத்திரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் பள்ளிக் கல்லூரி மாணவ, மாணவியா் பலரும் அனைத்து செயல்களிலும் நோ்மையாக செயல்படுவது என்றும்,ஊழல் தொடா்பான செய்திகளை உடனுக்குடன் உரிய அதிகாரிகளுக்கு தெரிவிப்பேன், லஞ்சம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம் என்ற உறுதிமொழியையும் சாா் ஆட்சியா் எஸ்.சரவணன் வாசிக்க, அதை அனைவரும் தொடா்ந்து வாசித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com