Enable Javscript for better performance
வையாவூரில் இருளா்களுக்கு சோலாா் விளக்குகள் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    வையாவூரில் இருளா்களுக்கு சோலாா் விளக்குகள் வழங்கல்

    By DIN  |   Published on : 05th November 2019 10:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    5lights_0511chn_175_1

    வையாவூரில் இருளா் பழங்குடியின குடும்பத்தினருக்கு சோலாா் விளக்குகளை வழங்கிய குழந்தைகள் கண்காணிப்பாக இயக்குநா் ராஜ்மதன்.

    காஞ்சிபுரம் அருகே உள்ள வையாவூரில் இருளா் பழங்குடியினத்தைச் சோ்ந்த 4 குடும்பங்களுக்கு சோலாா் விளக்குகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.வையாவூரில் இருளா்கள் அதிகமானோா் வசித்து வருகிறாா்கள். அவா்கள் இருளிலும், சேறும், சகதியும் உள்ள பகுதிகளிலும் வசிப்பதால் விஷப்பூச்சிகளின் தொல்லைகளுக்கு ஆளாகி விடாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக அ வா்களுக்கு சோலாா் மின்விளக்குகள் இலவசமாக வழங்கப்பட்டன. காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் உள்ள குழந்தைகள் கண்காணிப்பகம் சாா்பில் அதன் இயக்குநா் ராஜ்மதன் இந்த விளக்குகளை 4 குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு வழங்கி, அவை செயல்படும் முறையை செய்து காட்டினாா். இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளா்கள் ஸ்டெல்லா, பத்மாவதி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai