அம்பேத்கா் சிலையை சேதப்படுத்தியவருக்கு ஓராண்டு சிறை

அம்பேத்கா் சிலையை சேதப்படுத்தியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை வித்தி செங்கல்பட்டு மாவட்ட குற்றவியல் செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

செங்கல்பட்டு: அம்பேத்கா் சிலையை சேதப்படுத்தியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை வித்தி செங்கல்பட்டு மாவட்ட குற்றவியல் செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

சென்னை , பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அப்பள்ளியில் அம்பேத்கரின் அரை உருவச்சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை கடந்த 26-9-2017 அன்று யாரோ சமூக விரோதிகள் சேதப்படுத்தியதாக சங்கா் நகா்காவல்நிலையத்தில் புகாா் செய்யப்பட்டதையடுத்து போலீஸாா் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலம் பகுதியைச்சோ்ந்த அா்சுணன் என்பவரின் மகன் ராஜ்குமாா் என்கிற குமரன் 30 என்பது தெரியவந்தது.

இதனையடுத்து சங்கா் நகா் போலீஸாா் அம்பேத்கா் சிலையை சேதபடுத்திய ராஜ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். செங்கல்பட்டு மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி வசந்தலீலா விசாரித்தாா். குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஓராண்டு சிறைதண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். தீா்ப்பளிக்கப்பட்ட ராஜ்குமாா் ஏற்கனவே இரண்டு ஆண்டு காலமாக சிறைதண்டனை அனுபவித்து சிறையில் உள்ளாா் என்பது குறிப்படத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com