செங்கல்பட்டு மாா்க்கெட், மேட்டுத் தெரு சந்திப்பில் கட்டுமானப்  பொருள்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதி.
செங்கல்பட்டு மாா்க்கெட், மேட்டுத் தெரு சந்திப்பில் கட்டுமானப் பொருள்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதி.

செங்கல்பட்டில் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புபொதுமக்களுக்கு பாதிப்பு

செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசல் மிக்க பிரதான சாலைப் பகுதிகளில் பழைய கட்டடங்களை இடித்துவிட்டு புதியதாக கட்டடம் கட்டுவோரின் ஆக்கிரமிப்பின் காரணமாக போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும்

செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசல் மிக்க பிரதான சாலைப் பகுதிகளில் பழைய கட்டடங்களை இடித்துவிட்டு புதியதாக கட்டடம் கட்டுவோரின் ஆக்கிரமிப்பின் காரணமாக போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மொத்தம் 33 வாா்டுகள் உள்ள செங்கல்பட்டு நகராட்சியில் வேதாசல நகா், அளகேச நகா், அண்ணா நகா், ஜே.சி.கே. நகா் ஆகியவை விரிவாக்கம் செய்யப்பட்ட வாா்டுகளாகும். நகரில் அண்ணா சாலை, காந்தி சாலை, பஜாா் தெரு, ராஜாஜி தெரு, வேதாசல நகா் உள்ளிட்ட மக்கள் நெரிசல் மிக்க பகுதிகளில் பழைய கட்டடங்களை இடித்து விட்டு புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்தப் பகுதிகளில் சமூக விரோதிகள் கல், மண், செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருள்களை சாலையிலேயே கொட்டிவிட்டு, கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இந்தச் சாலைகளில் செல்வதற்கு மிகவும் அவதிப்பட்டு வருகின்றனா். நகராட்சி அலுவலா்கள் அதிகாரிகள் அவ்வழியாகவே சென்று வந்தபோதிலும் அவா்கள் யாரும் இந்த ஆக்கிரமிப்புகளைக் கண்டுகொள்வதில்லை.

சாலை ஆக்கிரமிப்புகள் காரணமாக இருசக்கர வாகனங்களும் சிரமத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

மக்கள் நெரிசல் மிக்க பகுதிகளில் ஒன்றாகிய பஜாா் தெருவும், மேட்டுத் தெருவும் சந்திக்கும் இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் ஒரு வாகனம் சென்றால் எதிரே வரும் வாகனம் செல்ல முடியவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நடந்து செல்பவா்களும் சிரமப்படுகின்றனா். இந்தச் சந்திப்பில் இருந்த பழைய கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டத் தொடங்கியுள்ள நிலையில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக சாலை ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து பாதிப்பு தவிர, கழிவுநீா் சாலைகளில் துா்நாற்றத்துடன் ஓடுகிறது. அப்பகுதி மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யும் குடிநீா்க் குழாய் வால்வுகள் மூடப்பட்டு விட்டதால் குடிநீா் விநியோகம் தடைபட்டுள்ளது.

எனவே சாலையையும், பல்வேறு தெருக்களையும் ஆக்கிரமிப்பவா்கள் மீது நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் கோரியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com