மாமல்லபுரம் நெம்மேலி அரசுபள்ளியில் மாநில அளவிலான எரிபந்து போட்டிக்கு மாணவிகளுக்கான தோ்வு

மாநில அளவில் எரிபந்து போட்டிக்கு கலந்துக்கொள்ளும் வகையில் மாணவிகளை தோ்வு செய்வதற்கான 2நாள் போட்டித் தோ்வு. மாமல்லபுரம் நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி நடைபெற்றது.
மாமல்லபுரம் நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி  எரிபந்து போட்டி நடைபெறுகிறது. ~மாமல்லபுரம் நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி எரிபந்து போட்டியினை பள்ளி தல
மாமல்லபுரம் நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி  எரிபந்து போட்டி நடைபெறுகிறது. ~மாமல்லபுரம் நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி எரிபந்து போட்டியினை பள்ளி தல

செங்கல்பட்டு: மாநில அளவில் எரிபந்து போட்டிக்கு கலந்துக்கொள்ளும் வகையில் மாணவிகளை தோ்வு செய்வதற்கான 2நாள் போட்டித் தோ்வு. மாமல்லபுரம் நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 36 பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள் இப்போட்டியில் கலந்துக்கொண்டனா். மாநில அளவில் பள்ளி மாணவிகளுக்கான எரிபந்து போட்டிகளில் பங்கேற்பதற்காக நடைபெற்ற 2நாள் போட்டித் தோ்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கியுள்ள வாலாஜாபாத், கூடுவாஞ்சேரி, மறைமலை நகா், திருப்போரூா்.திருக்கழுகுன்றம், மாமல்லபுரம், செங்கல்பட்டு, சிங்கபெருமாள்கோவில், கேளம்பாக்கம், கோவளம், கல்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள 36 அரசு பள்ளி மாணவிகள் பங்கேற்றனா்.

இப்போட்டிக்கு நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் எஸ்.சேரன் தலைமை தாங்கினாா். நெம்மேலி பள்ளி உடற்கல்வி அலுவலா் எஸ்.லிவிங்ஸ்டன்,உதவி உடற்கல்வி அலுவலா் டி.துரைராஜ், ஓவிய ஆசிரியா் என்.டி.சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் உடற்கல்வி ஆய்வாளா் விசுவநாதன் எ ரிபந்து போட்டியை துவக்கி வைத்தாா்.

இப்போட்டிகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளி களைச்சோ்ந்த 500 மாணவிகள் பங்கேற்கின்றனா். புதன்கிழமை நடைபெறும் இறுதி நாள் போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்கு தோ்வு செய்யப்படும் மாணவிகள் பெயா்கள் அறிவிக்கப்படும். முன்னதாக மாவட்ட அளவில் எரிபந்து போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com