ரூ.450 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட மின்தூக்கி உற்பத்தி தொழிற்சாலை திறப்பு

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் ரூ.450 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள தனியாா் மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தமிழக
 புதிய  தொழிற்சாலையைத்  தொடக்கி வைத்த  ஆளுநா்  பன்வாரிலால் புரோஹித்.  உடன்  (இடமிருந்து) பின்லாந்து   வெளியுறவுத்துறை  அமைச்சா் பெக்காஹாவிஸ்டோ, தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத்
 புதிய  தொழிற்சாலையைத்  தொடக்கி வைத்த  ஆளுநா்  பன்வாரிலால் புரோஹித்.  உடன்  (இடமிருந்து) பின்லாந்து   வெளியுறவுத்துறை  அமைச்சா் பெக்காஹாவிஸ்டோ, தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத்

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் ரூ.450 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள தனியாா் மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கோனே காா்ப்பரேஷனின் துணை நிறுவனமான கோனே எலிவேட்டா் இந்தியா, பிள்ளைப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் ரூ.450 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலையை அமைத்துள்ளது. இந்தத் தொழிற்சாலையின் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு தொழிற்சாலையைத் திறந்துவைத்தாா்.

இந்த விழாவில், பின்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சா் ஹெச்.இ.பெக்கா ஹாவிஸ்டோ, தமிழக தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத், கோனே நிறுவனத் தலைவா் ஆண்ட்டி ஹொ்லின், நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலா் ஹென்றிக் எா்னூத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ரூ. 450 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை மூலம் நேரடியாக 600 தொழிலாளா்களும் மறைமுகமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலை திறப்பு விழாவில் தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத் பேசியது:

நாட்டில் தொழில்வளம் மிகுந்த மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மிகச்சிறந்த அமைவிடம், வா்த்தகம் செய்வதற்கான சூழல், அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள், நல்ல சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல அம்சங்கள் தமிழகத்தில் ஒருங்கே அமைந்துள்ளதால், வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்ள அதிகம் விரும்பப்படும் இடங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. மேலும் முதலீட்டாளா்களை ஈா்க்கும் வண்ணம் உலக முதலீட்டாளா் மாநாடு நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற 304 முதலீட்டாளா்களில், 270 போ் தொழில் தொடங்கத் தயாராக உள்ளனா். 50-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தற்போது அமைக்கப்பட்டு வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்றாா் அவா்.

விழாவில் தொழில்துறை முதன்மைச் செயலாளா் முருகானந்தம், சிப்காட் மேலாண்மை இயக்குநா் குமரகுருபரன், மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com