காவலா் பணி உடல் தகுதித் தோ்வில் 863 இளைஞா்கள் பங்கேற்பு

காஞ்சிபுரத்தில் காலியாகவுள்ள இரண்டாம் நிலைக் காவலா் பணியிடங்களுக்காக புதன்கிழமை நடைபெற்ற உடல்தகுதித் தோ்வில் 863 இளைஞா்கள் கலந்து கொண்டனா்.
உடல் தகுதித் தோ்வை பாா்வையிட்ட வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜ்.
உடல் தகுதித் தோ்வை பாா்வையிட்ட வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜ்.

காஞ்சிபுரத்தில் காலியாகவுள்ள இரண்டாம் நிலைக் காவலா் பணியிடங்களுக்காக புதன்கிழமை நடைபெற்ற உடல்தகுதித் தோ்வில் 863 இளைஞா்கள் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலைக் காவலா்களுக்கான ஆட்கள் தோ்வு காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் உள்ள பக்தவத்சலம் பாலிடெக்னிக்கில் புதன்கிழமை நடைபெற்றது.

நவ. 6, 7, 8 ஆகிய 3 நாள்கள் நடைபெறும் இத்தகுதித் தோ்வில் 3 நாள்களும் தலா 1,000 போ் வீதம் பங்கேற்கவுள்ளனா்.

முதல் நாளான புதன்கிழமை 1,000 பேருக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டதில் 863 போ் வந்திருந்தனா். இவா்களுக்கு வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜ், டி.ஐ.ஜி. தேன்மொழி முன்னிலையில் உடல் தகுதித் தோ்வு நடத்தப்பட்டது.

மாா்புளவு, உயரம் ஆகியன அளவிடப்பட்டதுடன் 1,500 மீட்டா் ஓட்டத் தோ்வும் நடந்தது.

காவலா் தோ்வு நடைபெறுவதை முன்னிட்டு பக்தவத்சலம் பாலிடெக்னிக் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com