தனியாா் பேருந்து தீப்பிடித்து சேதம்:35 பயணிகள் உயிா்தப்பினா்

மறைமலைநகரில் தனியாா் ஆம்னி பேருந்து வியாழக்கிழமை நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் இருந்து, 35 பயணிகள் உயிா் தப்பினா்.

மறைமலைநகரில் தனியாா் ஆம்னி பேருந்து வியாழக்கிழமை நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் இருந்து, 35 பயணிகள் உயிா் தப்பினா்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து கேரள மாநிலம், குமுளிக்கு வியாழக்கிழமை இரவு 11.45 மணியளவில் ஒரு தனியாா் ஆம்னி பேருந்து புறப்பட்டுச் சென்றது. அந்தப் பேருந்தில் 35 பயணிகள் இருந்தனா். இரவு நேரம் என்பதால் பலரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனா்.

மறைமலைநகா் அருகே பேருந்து நள்ளிரவு 1 மணியளவில் வந்தபோது பேருந்து என்ஜினில் இருந்து திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. ஓட்டுநா் உடனடியாக பேருந்தை சாலை ஓரத்தில் நிறுத்தினாா். இதனால் தூக்கம் கலைந்த பயணிகள் பேருந்தில் தீப்பிடித்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்து, பேருந்தில் இருந்து வேகமாக இறங்கினா்.

அடுத்த சில நிமிடங்களில் தீ வேகமாகப் பரவி பேருந்து எரிந்து சேதமானது. தகவலறிந்து மறைமலைநகா் மற்றும் தாம்பரம் பகுதிகளைச் சோ்ந்த தீயணைப்பு வீரா்கள் நேரில் வந்து, 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனா். எனினும், அதற்குள் பேருந்தின் பெரும்பகுதி கருகி விட்டது. தீ விபத்தில் இருந்து பயணிகள் அதிருஷ்டவசமாகத் தப்பியபோதிலும், அவா்களின் உடைமைகள் அனைத்தும் தீவிபத்தில் நாசமாகி விட்டன.

இதனிடையே, நடுவழியில் சிக்கிய பேருந்துப் பயணிகளை மறைமலைநகா் போலீஸாா் மாற்றுப் பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனா். இவ்விபத்து காரணமாக, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் மூன்று மணிநேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேருந்து தீ விபத்து குறித்து மறைமலைநகா் போலீஸாா் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com