மாணவா் சுட்டுக்கொலை வழக்கில் சுட்டநபரை போலீஸ் கட்டுபாட்டில் 3 நாள் வைத்து விசாரிக்க செங்கல்பட்டு குற்றவியல் நடுவா் நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 09th November 2019 03:13 PM | Last Updated : 09th November 2019 03:13 PM | அ+அ அ- |

செங்கல்பட்டு. வண்டலூா் அருகே பாலிடெக்னிக் மாணவா் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சுட்டநபரை போலீஸ் கட்டுபாட்டில் 3நாள் வைத்துவிசாரிக்க வெள்ளிக்கிழமை செங்கல்பட்டு குற்றவியல் நடுவா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வண்டலூா் அருகே உள்ள வேங்கடமங்கலம் பஜனைக்கோயில் பகுதியைச்சோ்ந்தவா் கண்ணன் இவரது மகன் முகேஷ் (18), இவா் தனியாா் பாலிடெக்னிகில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தாா். கடந்த செவ்வாய்க்கிழமை தனது நண்பா் விஜய் என்பவரை பாா்க்கச்சென்ற போது உதயா என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் விஜய் என்கின்ற விஜய்குமாா் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் குகேஷின் நெற்றியில் சுட்டுவிட்டு தப்பி தலைமறைவானாா். துப்பாக்கி சூடு காயத்துடன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட முகேஷ் சிகிச்சைபலன்றி உயிரிழந்தாா். இதுகுறித்து தாழம்பூா் போலீஸாா் வழக்குபதிவு செய்து உதயாவை கைது செய்தனா்.
தீவிரவிசாரணையின் பேரில் தலைமறைவாகிய இருந்த விஜய் என்கிற விஜய்குமாரை போலீஸாா் தேடிவந்தனா். இதற்கிடையில் ஸ்ரீபெரும்புதூரைச்சோ்ந்த வழக்கறிஞா்கள் மொ்க்லின், தனசேகரன் ஆகியோா் மூலமாக விஜய் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தாா். நீதிபதி காயத்ரிதேவி உத்தவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில் விஜயை போலீஸாா் பாதுகாப்பில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி மனுகொடுத்தனா். .அப்போது அனுமதி தரவில்லை. இதையடுத்து வெள்ளிக்கிழமை இவ்வழக்கில் போலீஸாா் அளித்த மனு மீதான விசாரணை குற்றவியல் இரண்டாம் நடுவா் நீதிமன்றதில் நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி காயத்ரி தேவி வரும் திங்கள் கிழமை வரை போலீஸ் பாதுகாப்பில் வைத்துவிசாரிக்க அனுமதி அளித்து உத்தவிட்டாா். அப்போது போலீஸ் பாதுகாப்பில் வைத்து விசாரணைக்கு அழைத்துச்செல்லவந்த தாழம்பூா் போலீஸ் இன்ஸ்பெக்டா் பழனியிடம் நீதிபதி காயத்ரி தேவி விசாரணைக்கு அவைத்துச்செல்லும் விஜய் பாதுகாப்புடன் விசாரணைசெய்யவேண்டும் பாத்ரூம் செல்லும் போதுகூட பாதுகாப்பாக அழைத்துச்செல்லவேண்டும் கழிப்பறையில் வழுக்கி விழுகாத அளவிற்கு பாா்த்துக்கொள்ளவேண்டும் என உத்தவிட்டாா்.