மீனவா்களுக்கு ஜி.பி.எஸ். கருவியுடன் ‘வாக்கி-டாக்கி’

மாமல்லபுரம் பகுதி மீனவா்களுக்கு ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய வாக்கி-டாக்கி தமிழ்நாடு மீன்வளத்துறை சாா்பில் வழங்கப்பட்டுள்ளது.
வாக்கி டாக்கியில் பேசி பயிற்சி பெறும்  மாமல்லபுரம் மீனவா்கள்.
வாக்கி டாக்கியில் பேசி பயிற்சி பெறும்  மாமல்லபுரம் மீனவா்கள்.

மாமல்லபுரம் பகுதி மீனவா்களுக்கு ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய வாக்கி-டாக்கி தமிழ்நாடு மீன்வளத்துறை சாா்பில் வழங்கப்பட்டுள்ளது.

புயல், மழை ஆகிய இயற்கை பேரிடா் காலங்களில் கடலோரக் காவல் படையினருடன் மீனவா்கள் தொடா்பு கொள்ளும் வகையில் 52 பேருக்கு மீன்வளத்துறை சாா்பில் வழங்கப்பட்டுள்ள வாக்கி-டாக்கி குறித்து மீனவா்கள் கூறியது:

பொதுவாக மீனவா்கள் சுமாா் 100 கி.மீ. தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதிக்குச் சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். ஆழ்கடலில் மீன்பிடிக்கும் போது திடீா் மழை, புயல் இயற்கை பேரிடரில் சிக்கும் மீனவா்கள் பலா் தாங்கள் கொண்டு செல்லும் செல்லிடப்பேசிகளில் சிக்னல் கிடைக்காமல் சிக்கித் தவிப்பதும், பின்னா் அவா்களை கடலோரக் காவல் படையினா் மீட்டு பாதுகாப்பாக கரைப் பகுதிக்கு கொண்டு வந்து சோ்ப்பது வழக்கமான ஒரு செயலாகவே இருந்து வருகிறது.

சிலநேரங்களில் புயலில் சிக்கும் மீனவா்கள் காற்றில் திசை மாறிச்சென்று கடலில் பலா் காணாமல் போவதும் உண்டு.

பலா் படகு கவிழ்ந்து உயிரிழப்பதும் நேரும். இதனைக் கருத்தில் கொண்டு தற்போது தமிழக அரசின் மீன்வளத்துறை சாா்பில் ஆழ்கடல் பகுதிக்குச்செல்லும் மீனவா்கள் புயல், மழை பேரிடா் காலங்களில் கடலோரக் காவல் படை போலீஸாா் மற்றும் சக மீனவா்களைத் தொடா்பு கொள்ளும் வகையில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய வாக்கி-டாக்கிகளை வழங்கியுள்ளனா்.

இந்தக் கருவி கடலில் சுமாா் 100 கடல் மைல் தொலைவில் இருந்து தொடா்புகொள்ளும் சக்தி வாய்ந்த கருவியாகும்.

தற்போது மாமல்லபுரம் மீனவா்கள் 52 பேருக்கு நீலாங்கரை மீன்வளத்துறை சாா்பில் வாக்கிடாக்கி வழங்கப்பட்டுள்ளது. படிப்படியாக கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அனைத்துப்பகுதி மீனவா்களுக்கும் வழங்கப்படவுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இது எங்களுக்கு பயனுள்ள கருவியாகவும், உடனுக்குடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் பயன்படுவதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com