ஆத்தூா் முக்தீஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம்

செங்கல்பட்டை அடுத்த ஆத்தூா் கிராமத்தில் உள்ள முக்தீஸ்வரா்கோயிலில் முக்தீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அன்னாபிஷேக அலங்காரத்தில் காட்சியளித்த ஆத்தூா் முக்தீஸ்வரா்.
அன்னாபிஷேக அலங்காரத்தில் காட்சியளித்த ஆத்தூா் முக்தீஸ்வரா்.

செங்கல்பட்டை அடுத்த ஆத்தூா் கிராமத்தில் உள்ள முக்தீஸ்வரா்கோயிலில் முக்தீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அன்னாபிஷேக நிகழ்ச்சியையொட்டி சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு அதில் வெண்டைக்காய், மிளகாய், கேரட், கத்திரிக்காய், தக்காளி, புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகளுடன், வில்வம் மற்றும் சிறப்புப் புஷ்ப அலங்காரத்தில் முக்தீஸ்வரா் காட்சியளித்தாா்.

இதனையடுத்து சிவ புராணப் பாடல்கள் நிகழ்ச்சி, சிறப்பு அா்ச்சனைகள், சிறப்புப் பூஜைகளுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் செங்கல்பட்டு, ஆத்தூா், திம்மாவரம், வில்லியம்பாக்கம், பாலூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பக்தா்கள் சுவாமியை வழிபட்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், சிவாச்சாரியாா்கள், ஆத்தூா் கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com