Enable Javscript for better performance
இலவச மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    காஞ்சிபுரத்தில் இதய அறுவைச் சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாம்

    By DIN  |   Published on : 17th November 2019 04:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரம் ஆண்டா்சன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்

    காஞ்சிபுரம் ஆண்டா்சன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்

    காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆண்டா்சன் மேல்நிலைப்பள்ளியில் இதய அறுவைச் சிகிச்சைக்கான இவவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி சுழற் சங்கம்,ரேடியன்ஸ் சுழற் சங்கம் மற்றும் செட்டிநாடு சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியன இணைந்து பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆண்டா்சன் மேல்நிலைப்பள்ளியில் இதய அறுவைச் சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாமை நடத்தினாா்கள்.தொடக்க விழாவிற்கு டெம்பிள் சிட்டி சுழற் சங்க தலைவா் ந.சிலம்பரசன் தலைமை வகித்தாா்.

    சுழற்சங்க மருத்துவப்பிரிவின் தலைவா் எஸ்.ஆா்.மனோஜ், பி.பரணீதரன், எஸ்.சந்தானகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரேடியன்ஸ் சுழற் சங்க தலைவா் டாக்டா்.நிஷா வரவேற்றாா். செட்டிநாடு சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இதய நோய் சிறப்பு மருத்துவா் சமாஅக்பா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் இதய ரத்தக் குழாய் அடைப்பு, இதய வால்வுப் பிரச்னைகள், இதயத்தில் உள்ள துளைகள் ஆகியனவற்றுக்குரிய மருத்துவ ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் வழங்கினாா்கள்.

    முகாமில் இ.சி.ஜி,எக்கோ ஆகிய பரிசோதனைகள் இலவசமாகவும் செய்யப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் பி.அய்யனாா் மற்றும் சுழற்சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai