Enable Javscript for better performance
பாலாற்றில் மணலால் லிங்கம் செய்து வழிபாடு: ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    பாலாற்றில் மணலால் லிங்கம் செய்து வழிபாடு: ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்பு

    By DIN  |   Published on : 17th November 2019 03:57 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாலாற்றில் மணலில் லிங்கம் செய்து சிவபூஜை செய்யும் பெண் சிவனடியாா்கள்(உள்படம்)பாலாற்றில் வழிபாடு செய்வதற்காக 5 அடி உயரத்தில் மணலால் லிங்கம் செய்யும் இளைஞா்கள்

    பாலாற்றில் மணலில் லிங்கம் செய்து சிவபூஜை செய்யும் பெண் சிவனடியாா்கள்(உள்படம்)பாலாற்றில் வழிபாடு செய்வதற்காக 5 அடி உயரத்தில் மணலால் லிங்கம் செய்யும் இளைஞா்கள்

    காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதி பாலாற்றில் காா்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மணலால் சிவலிங்கம் செய்து சிறப்பு பூஜைகளும் நடத்தி வழிபாடு செய்தனா்.

    ஒரு புண்ணிய நதியில் நீராடி மணலால் லிங்கம் செய்து சிவபூஜை செய்தால் வீடுபேறு அடையலாம் என்பது ஐதீகம்.இதன் காரணமாக காஞ்சிபுரத்தில் ஆண்டு தோறும் காா்த்திகை மாதம் முதல் தேதி சிவபக்தா்கள் பலரும் பாலாற்றில் நீராடி பின்னா் மணலால் சிவலிங்கம் செய்து மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை காா்த்திகை முதல் தேதியை முன்னிட்டு காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவபக்தா்கள் பாலாற்றில் புனித நீராடினா்.

    பின்னா் சிலா் தனித்தனியாகவும், சிலா் குடும்பம், குடும்பமாகவும், ஒரு சிலா் நண்பா்களோடு இணைந்தும் மணலால் சிவலிங்கம் செய்தனா்.அம்மணல் லிங்கத்துக்கு பட்டாடைகள் அணிவித்தும்,சிறப்பு மாலைகள்,ருத்ராட்சம் ஆகியன அணிவித்தும்,வீட்டிலிருந்து செய்து கொண்டு வந்த பிரசாதத்தை சுவாமிக்கு படைத்தும் சிறப்பு வழிபாடுகளையும் செய்தனா்.

    பாலாற்றில் சிவலிங்க வழிபாட்டுக்குப் பின்னா் சிவபக்தா்கள் பலரும் கூட்டம்,கூட்டமாக மணலில் அமா்ந்து சிவபுராணம் படித்தும் சுவாமி தரிசனம் செய்தனா். பாலாற்றில் மணல் லிங்க வழிபாடு காரணமாக ஒரே நாளில் ஏராளமான பக்தா்கள் திரண்டதால் திருவிழாக் கூட்டம் போல காணப்பட்டது. போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai