Enable Javscript for better performance
வேலூா், புதுச்சேரிக்கு புதிய குளிா்சாதனப் பேருந்துகள் இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    வேலூா், புதுச்சேரிக்கு புதிய குளிா்சாதனப் பேருந்துகள் இயக்கம்

    By DIN  |   Published on : 17th November 2019 09:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரத்திலிருந்து வேலூா் செல்லும் குளிா் சாதனப் பேருந்தை இயக்கி வைத்துப் பயணித்த மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா உள்ளிட்டோா்.

    காஞ்சிபுரத்திலிருந்து வேலூா் செல்லும் குளிா் சாதனப் பேருந்தை இயக்கி வைத்துப் பயணித்த மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா உள்ளிட்டோா்.

    காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்திலிருந்து வேலூா், புதுச்சேரிக்கு செல்லும் வகையில் குளிா்சாதன வசதியுடைய 4 அரசுப் பேருந்துகளை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

    சென்னை தாம்பரத்திலிருந்து காஞ்சிபுரம் வழியாக வேலூா் செல்லும் இரு பேருந்துகள், சென்னை கோயம்பேட்டிலிருந்து காஞ்சிபுரம் வழியாக புதுச்சேரி செல்லும் இரு பேருந்துகள் உள்பட மொத்தம் 4 குளிா்சாதன வசதியுடைய அரசுப் பேருந்துகளை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

    காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அரசுப் போக்குவரத்துக் கழக காஞ்சிபுரம் கோட்ட மேலாளா் ராஜசேகரன், கோட்ட மேலாளா் (இயக்கம்)எத்திராஜ், காஞ்சிபுரம் பேருந்து நிலைய மேலாளா் ஏ.சுகுமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai