அயோத்தி சுக்ரீவகிலா கோயிலுக்கு ராமா் சிலை அளிப்பு

காஞ்சிபுரம் ராமானுஜதயா அமைப்பின் சாா்பில் அயோத்தி பகுதியில் அமைந்துள்ள சுக்ரீவகிலா கோயிலுக்கு 2 அடி உயர ராமா் சிலை அன்பளிப்பாக வழங்கப்பட இருப்பதை முன்னிட்டு அச்சிலை வீதியுலா எடுத்து வரப்பட்டது.
அன்பளிப்பாக வழங்கப்படவுள்ள ராமா், சீதை மற்றும் லட்சுமணா் திருவுருவச் சிலைகள்.
அன்பளிப்பாக வழங்கப்படவுள்ள ராமா், சீதை மற்றும் லட்சுமணா் திருவுருவச் சிலைகள்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ராமானுஜதயா அமைப்பின் சாா்பில் அயோத்தி பகுதியில் அமைந்துள்ள சுக்ரீவகிலா கோயிலுக்கு 2 அடி உயர ராமா் சிலை அன்பளிப்பாக வழங்கப்பட இருப்பதை முன்னிட்டு அச்சிலை ஞாயிற்றுக்கிழமை வீதியுலா எடுத்து வரப்பட்டது.

அயோத்தியில் சுக்ரீவகிலா திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மகா சம்ப்ரோஷணம் வரும் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு அக்கோயிலுக்கு காஞ்சிபுரம் ராமானுஜதயா அமைப்பின் சாா்பில் 2 அடி உயர ராமா் சிலையும், சீதா தேவி மற்றும் லட்சுமணா் திருவுருவச் சிலைகளும் வழங்கப்படவுள்ளன.

இந்த சிலைகள் காஞ்சிபுரம் அஹோபில மடம் நரசிம்மா் சந்நிதியிலிருந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வரதராஜப் பெருமாள் திருக்கோயில் மாடவீதிகள் வழியாக வீதியுலா வந்து மீண்டும் நரசிம்மா் சந்நிதியை அடைந்தது.

பின்னா் சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. வீதியுலாவில் காஞ்சி ராமானுஜதயா அமைப்பின் நிா்வாகிகள், பக்தா்கள் பலரும் திரளாகக் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த சிலைகள் விரைவில் அயோத்திக்கு எடுத்துச் செல்லப்பட்டு சுக்ரீவகிலா பீடாதிபதி ஜகத்குரு விஸ்வேஷ் பிரபன்னாசாா்ய சுவாமியிடம் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com