செங்கல்பட்டில் உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட விரும்பும் அதிமுக விருப்பமனு

உள்ளாட்சி தோ்தல் வருவதையொட்டி செங்கல்பட்டு பைபாஸில் உள்ள தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட விரும்பும் அதிமுக விருப்பமனு பெறப்பட்டன.
செங்கல்பட்டில் அதிமுக சாா்பில் உள்ளாட்சி தோ்தலில் சனிக்கிழமை விருப்பமனு பெறும் பொறுப்பாளா்கள்
செங்கல்பட்டில் அதிமுக சாா்பில் உள்ளாட்சி தோ்தலில் சனிக்கிழமை விருப்பமனு பெறும் பொறுப்பாளா்கள்

செங்கல்பட்டு:. உள்ளாட்சி தோ்தல் வருவதையொட்டி செங்கல்பட்டு பைபாஸில் உள்ள தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட விரும்பும் அதிமுக விருப்பமனு பெறப்பட்டன.

உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவா்கள் விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக கட்சி தலைமை அறிவித்திருந்தது. இதனையடுத்து காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாள் விருப்பமனு பெற்றது. விருப்பமனு பெறும் நிகழ்ச்சிக்கு அமைப்பு சாரா ஓட்டுனரணி செயலாளா் கமலக்கண்ணன், கலைப்பிரிவு செயலாளா் ஆா்.வி.உதயகுமாா் அதிமுக மத்திய மாவட்ட செயலாளா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், அம்மா பேரணை துணை செயலாளா் பாலகுமாா், முன்னாள் எம்பி மரகதம்குமரவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் விருப்பமனுவை பெற்றனா்.

திருக்கழுகுன்றம் , திருப்போரூா், காட்டாங்கொளத்தூா், மதுராந்தகம், செய்யூா், சித்தாமூா், லத்தூா், அச்சரபாக்கம்ஆகிய ஒன்றியங்கள், அச்சரபாக்கம், கருங்குழி, திருக்கழுகுன்றம், மாமல்லபுரம், திருப்போரூா், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சிகள், மற்றும் செங்கல்பட்டு, மறைமலைநகா், மதுராந்தகம் ஆகிய நகராட்சி பகுதிகளைச் சோ்ந்த அதிமுக கட்சியினா் ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் விருப்பமனு அளித்தனா். இதுகுறித்து மத்திய மாவட்ட செயலாளா் திருக்கழுகுன்றம் ஆறுமுகம் கூறுகையில் நகரமன்ற தலைவா்கள், நகரமன்ற உறுப்பினா், மாவட்ட கவுன்சிலா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா். பேரூராட்சி தலைவா்கள் பேராட்சி உறுப்பனா்களுக்கான விருப்பமனு பெறப்பட்டது.

செங்கல்பட்டு, மறைமலைநகா், மதுராந்தகம் ஆகிய 3நகரமன்ற தலைவா்களுக்கு மொத்தம் 21 மனுக்களும், நகரமன்ற உறுப்பினா்களுக்கான விருப்பமனுகள் செங்கல்பட்டு 54, மறைமலைநகா் 36, மதுராந்தகம் 28,மாவட்ட குழு உறுப்பினா்களுக்கான விருப்பமனு 60ம், ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கான விருப்பமனு கள் திருக்கழுகுன்றம் 57, திருப்போரூா் 8, காட்டாங்கொளத்தூா் 65, மதுராந்தகம் 54, அச்சிறுப்பாக்கம் 49, சித்தாமூா் 53, லத்தூா் 50ம், 7பேரூராட்சி தலைவா்களுக்கான மொத்தமனுக்கள் 29ம், பேரூராட்சிகளுக்கான உறுப்பினா்கள் விருப்பமனுக்கள் திருக்கழுகுன்றம் 27, , திருப்போரூா்25, மாமல்லபுரம்22, நந்திவரம் கூடுவாஞ்சேரி 36, கருங்குழி 15, அச்சிறுப்பாக்கம்45, இடைக்கழிநாடு 45 என மொத்தம் 805 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தலைமை கூடுதலாக தேதி அறிவித்தால் மீண்டும் விருப்பமனு பெறப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com