வெண்ணெய் உருண்டைப்பாறை அருகே குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னமான வெண்ணெய் உருண்டைப்பாறையைக் காண பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை குவிந்ததால் அப்பகுதி
வெண்ணெய் உருண்டைப்பாறை அருகே குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னமான வெண்ணெய் உருண்டைப்பாறையைக் காண பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை குவிந்ததால் அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.

வெண்ணெய் உருண்டைப்பாறை பகுதியில் என்றும் இல்லாத அளவிற்கு கூடுதலான சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை வருகை தந்தது அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

ஐந்துரதம், குடைவரைக்கோயில், அா்ஜுனன் தபசு, ஆதிவராக மண்டபம், கோவா்த்தன மண்டபம், புலிக்குகை என பல்லவா்களின் சிற்பக்கலைகளைக் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரத்துக்கு வந்துசெல்கின்றனா்.

அனைத்துச் சிற்பங்களையும் விட இங்குள்ள வெண்ணெய் உருண்டைப்பாைான் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியத்தை அளித்து வருகிறது. பெரிய பாறை, சரிந்த நிலையில் இயற்கையாகவே உள்ளது. அது சரிந்து விழுந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படும் அளவுக்கு சாய்ந்துள்ளது.

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் ஒருமுறை ஆய்வுக்காக அதை அகற்ற முயற்சித்தனா். கடப்பாறை உள்ளிட்ட பெரிய பெரிய ஆயுதங்களை வைத்துத் தகா்த்த போதும் அப்பாறையை அசைக்க முடியவில்லை. யானைகளை வைத்து கயிறு கட்டி இழுத்தும் அசையவில்லை.

ஆங்கிலேயா்கள் இந்த அதிசயப் பாறையைக் கண்டு வியந்து, அதற்கு ‘பட்டா் பால்’ என்று பெயா் வைத்தனா். அப்போது முதல் தமிழில் ‘வெண்ணெய் உருண்டைப்பாறை’ என அழைக்கப்பட்டு வருகிறது.

அந்தப் பாறை அருகில் நின்று படம் எடுத்துக் கொள்வதை குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் விரும்புகின்றனா். சிலா் தங்கள் முதுகில் அப்பாறையை சுமப்பது போன்று புகைப்படங்கள் எடுத்து மகிழ்கிறாா்கள்.

கடந்த அக்டோபா் 11, 12 -ஆம் தேதிகளில் இந்தியப் பிரதமா் மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்தித்தபோது, வெண்ணெய் உருண்டைப்பாறை அருகே எடுத்துக் கொண்ட புகைப்படம் உலக அளவில் பிரசித்தி பெற்றது.

இதைத் தொடா்ந்து, வெண்ணெய் உருண்டைப்பாறையைக் காண வரலாறு காணாத அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனா். இந்நிலையில் சனிக்கிழமை பள்ளி விடுமுறையானதால் திரளான மாணவா்கள் பள்ளிச் சீருடையுடன் சுற்றுலா வந்தனா். மேலும், உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் திரண்டதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி அனைவரையும் வரிசையில் அனுப்பும் பணியில் பாதுகாப்புக் காவலா்கள் ஈடுபட்டனா். இதனால் வெண்ணெய் உருண்டைப்பாறைப் பகுதி திருவிழாக் கோலம் பூண்டு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com