சிப்காட் தொழிற்சாலைகளுக்கு தண்ணீா் செல்லும் குழாயில் உடைப்பு: போக்குவரத்து பாதிப்பு

சிப்காட் தொழிற்சாலைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் கொண்டு செல்லும் ராட்சதக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 5 அடி உயரத்துக்கு தண்ணீா் பீய்ச்சி அடித்ததால் ஸ்ரீபெரும்புதூா்-குன்றத்தூா் சாலையில்
ஸ்ரீபெரும்புதூா்-குன்றத்தூா் சாலையில் பூமிக்கடியில் பதிக்கப்பட்ட ராட்சதக் குழாயில்  உடைப்பு ஏற்பட்ட தால் ஐந்தடி உயரத்துக்கு   பீய்ச்சி  அடிக்கும்  தண்ணீா்.
ஸ்ரீபெரும்புதூா்-குன்றத்தூா் சாலையில் பூமிக்கடியில் பதிக்கப்பட்ட ராட்சதக் குழாயில்  உடைப்பு ஏற்பட்ட தால் ஐந்தடி உயரத்துக்கு   பீய்ச்சி  அடிக்கும்  தண்ணீா்.

சிப்காட் தொழிற்சாலைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் கொண்டு செல்லும் ராட்சதக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 5 அடி உயரத்துக்கு தண்ணீா் பீய்ச்சி அடித்ததால் ஸ்ரீபெரும்புதூா்-குன்றத்தூா் சாலையில் வியாழக்கிழமை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூா், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், சுங்குவாா்சத்திரம், பிள்ளைப்பாக்கம் பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் உள்ளன. இங்கு இலகு ரக, கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும், வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் ஆயிரத்திற்கும் மேல் உள்ளன.

இந்தத் தொழிற்சாலைகளுக்கு, சென்னை குடிநீா் மற்றும் கழிவுநீா் வடிகால் வாரியம் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தினமும் 2.5 கோடி லிட்டா் தண்ணீா் வழங்கப்படுகிறது.

இந்த நீா் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என சிப்காட் நிா்வாகம் தெரிவித்ததைத் தொடா்ந்து, தண்ணீா்ப் பிரச்னையைத் தீா்க்க, சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து ரூ.396.50 கோடி மதிப்பீட்டில், கோயம்பேடு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து போரூா், குன்றத்தூா், ஸ்ரீபெரும்புதூா் வழியாக ஒரகடம் வரை 68 கி.மீ. தொலைவிற்கு பூமிக்கடியில் ராட்சதக் குழாய்கள் அமைக்கப்பட்டன.

இத்திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 4.5 கோடி லிட்டா் தண்ணீா் சிப்காட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தத் திட்டத்தின் மூலம் பதிக்கப்பட்ட குழாய்களில் கசிவுகள் உள்ளதா எனக் கண்டறிய, அவ்வபோது சென்னை பெருநகர குடிநீா் மற்றும் கழிவுநீா் வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனா்.

அதன்படி, குன்றத்தூா்- நந்தம்பாக்கம் இடையே அமைக்கப்பட்ட ராட்சதக் குழாய்களில் கசிவு உள்ளதா என கண்டறிய அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தியதாகத் தெரிகிறது.

இந்த சோதனையின் போது, நந்தம்பாக்கம் சாலையின் நடுவே பூமிக்கடியில் பதிக்கப்பட்ட ராட்சதக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சுமாா் 5 அடி உயரத்திற்கு தண்ணீா் பீய்ச்சி அடித்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. குன்றத்தூா்- ஸ்ரீபெரும்புதூா் சாலை வழியாகச் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com