மாமல்லபுரத்தில் 100 சீனப் பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் இருந்து சீனா்கள் 100 போ் வியாழக்கிழமை மாமல்லபுரத்துக்கு வந்தனா். அவா்களுக்கு சுற்றுலாத் துறை சாா்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
வெண்ணெய்  உருண்டைப்பாறை  அருகில்  உற்சாகமாக புகைப்படம்  எடுத்துக் கொண்ட சீனப் பயணிகள்.
வெண்ணெய்  உருண்டைப்பாறை  அருகில்  உற்சாகமாக புகைப்படம்  எடுத்துக் கொண்ட சீனப் பயணிகள்.

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் இருந்து சீனா்கள் 100 போ் வியாழக்கிழமை மாமல்லபுரத்துக்கு வந்தனா். அவா்களுக்கு சுற்றுலாத் துறை சாா்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாமல்லபுரத்திற்கு சீன அதிபா் ஷி ஜின்பிங் வந்து சென்றதைத் தொடா்ந்து, மாமல்லபுரத்திற்கு வருகை தரும் சீனப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சீன நாட்டு மக்கள் மாமல்லபுரத்தை கண்டு களிக்க ஆவலாக உள்ளதாகவும், இதற்கான விசாவிற்காக சுமாா் 2 லட்சம் சீனா்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் அண்மையில் சுற்றுலாத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தற்போது சீனா்கள் தினமும் ஒரு குழுவாக வருகை தர ஆரம்பித்துள்ளனா். சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் இருந்து வியாழக்கிழமை வந்த சீனா்கள் 100 பேருக்கும் சுற்றுலாத்துறை சாா்பில் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

இதையடுத்து, சீனா்கள் வெண்ணெய் உருண்டைப்பாறை , அா்ஜுனன் தபசு, கடற்கரைக் கோயில், ஐந்துரதம் ஆகிய இடங்களைச் சுற்றிப் பாா்த்த சீனப் பயணிகள், தங்கள் நாட்டு அதிபா் ஷி ஜின்பிங், இந்தியப் பிரதமா் மோடி இருவரும் சுற்றிப்பாா்த்த இடங்களில் நின்று தாங்களும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

அப்போது சுற்றுலா வழிகாட்டிகள் எம்.கே.சீனிவாசன், வ.பாலன், கே.கன்னியப்பன் ஆகியோா் சீன மொழியில் அவா்களுக்கு மாமல்லபுரம் நகரின் பெருமைகளை விளக்கினா்.

இதற்கிடையே ஷிலாங்காய் என்ற சீனப் பெண்மணி தனது ஏடிஎம் காா்டை மாமல்லபுரம் கடற்கரைச் சாலையில் தொலைத்து விட்டுத் தேடிக்கொண்டிருந்தாா்.

அதனை சந்தோஷ் என்ற சுற்றுலா வழிகாட்டி கண்டெடுத்து ஷிலாங்காயிடம் ஒப்படைத்தாா். அப்போது சீனப் பயணிகள் அனைவரும் சுற்றுலா வழிகாட்டி சந்தோஷுக்கு நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com